கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயம் ஆனரர்.;

Update:2023-09-25 23:10 IST

தோகைமலை அருேக உள்ள கோமாளிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் மாதேஷ் (வயது 19). இவர் கரூர் பகுதியில் உள்ள தனியார் கேட்டரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 23-ந்தேதி காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் மாலை வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து பெற்றோர் மாதேசை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாதேசின் தாய் லோகாம்பாள் கொடுத்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்