நண்பர்களுடன் குளித்த போதுகாவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலிமேட்டூர் அருகே பரிதாபம்

Update: 2023-07-30 20:03 GMT

மேட்டூர்

மேட்டூர் அருகே நண்பர்களுடன் குளித்த போது காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

கல்லூரி மாணவர்

மேட்டூர் சின்னபார்க் பகுதியை சேர்ந்த ராஜா மகன் தனுஷ் (வயது 16). தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து வந்தார். தனுஷ், தன்னுடைய நண்பர்களான தீபக், மற்றொரு தீபக், ஸ்ரீநாத் ஆகியோருடன் சேர்ந்து மேட்டூர் அனல்மின் நிலைய புதுப்பாலம் அருகில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தனுஷ் நண்பர்களுடன் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததாக தெரிகிறது. நீச்சல் தெரியாததால் தனுஷ் தண்ணீரில் மூழ்கினார். இதுபற்றி அவருடைய நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மேட்டூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

பெற்றோர் கதறல்

தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தண்ணீரில் மூழ்கி இறந்து போன தனுஷ் உடலை மீட்டு மேட்டூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் பிரேத பரிசோதனைக்காக தனுஷ் உடலை மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தனுஷ் உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் பெற்றோர் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் மேட்டூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்