பெரியதாழை அருகே பஸ் மோதி கல்லூரி மாணவர் காயம்
பெரியதாழை அருகே பஸ் மோதி கல்லூரி மாணவர் காயம் அடைந்துள்ளார்.
குலசேகரன்பட்டினம்:
மணப்பாடு புதுகுடியேற்றை சேர்ந்த நெல்சன் ராஜ் மகன் சுதர்சன் (வயது 21). இவர் கொம்மடிகோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று ஊரிலிருந்து பெரியதாழை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அமராபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, உவரியில் இருந்து வந்த தனியார் பஸ் மோதியதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் காயமடைந்தார். அவர் திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான நாங்குநேரியை சேர்ந்த ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகிறார்