மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் சாவு
துடியலூரில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
துடியலூர்
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனது குடும்பத்துடன் கோவை சின்னதடாகத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். முருகேசனின் மகன் மோகன்ராஜ் (வயது 19). இவர் ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர்களுடைய வீட்டில் நேற்று விளக்குகள் எரியவில்லை. இதனால் மின்சார இணைப்பை சரிசெய்ய மோகன்ராஜ் முயன்றதாக தெரிகிறது.
அப்போது திடீரென மின்சாரம் தாக்கி மோகன்ராஜ் மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு சயெ்து விசாரணை நடத்தி வருகின்றனர்.