கல்லூரி மாணவர் சாவு; 2 பேர் படுகாயம்

கல்லூரி மாணவர் சாவு; 2 பேர் படுகாயம்

Update: 2022-08-23 14:21 GMT

கோவை

கோவை குறிச்சி குளக்கரையில் கல்லூரி மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியது. இதில் ஒரு மாணவர் இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:-

கல்லூரி மாணவர்கள்

கோவை செல்வபுரம், தில்லை நகரை சேர்ந்தவர் விஷ்ணு (வயது19). இவர் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தார். இவருடைய கல்லூரி தோழர்கள் விக்னேஷ் (19), கோவை இடையர் வீதியை சேர்ந்தவர். மற்றொரு நண்பர் சதீஷ்வரன் (19). சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர்.3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று காலை 7.15 மணிக்கு கல்லூரிக்கு சென்றனர்.

மரத்தில் மோதி சாவு

கோவை குறிச்சி குளம், பொங்காளியம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிரே ஒரு லாரி மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் மோதியது. இதனால் விஷ்ணுவின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அதிவேகமாக சென்று அருகில் இருந்த மரத்தில் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அவர்களை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.இதில் சிகிச்சை பலனின்றி விஷ்ணு பரிதாபமாக இறந்தார்.

லாரிடிரைவர் மீது வழக்கு

விக்னேஷ் உயிர் ஊசலாடுகிறது. சதீசின் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து கோவை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் லாரி டிரைவர் திலீப் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்