கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை
வாணாபுரம் அருகே கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.
வாணாபுரம் அருகே கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.
மாணவி தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூரில் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஓசூரை சேர்ந்த கருணாநிதி என்பவரது மகள் காயத்ரி (வயது 21), 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் காயத்ரி அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். இதனைப் பார்த்தவர்கள் உடனே மாணவியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் வாணாபுரம் போலீசார் விடுதிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீசாா் வழக்குப்பதிவு செய்து மாணவி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவி கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.