தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை

விக்கிரவாண்டி அருகே வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-14 18:46 GMT

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அருகே ஆலகிராமம் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் வைஷ்ணவி (வயது 19). இவர் மயிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு மீண்டும் வைஷ்ணவி வீட்டுக்கு வந்தார்.

பின்னர் அவர் வீட்டு வேலைகளை செய்யாமல் இருந்ததாக தெரிகிறது. இதைபார்த்த அவரது தாய் கலைச்செல்வி, வீட்டு வேலை ஏதும் செய்யாமல் ஏன் இப்படி இருக்கிறாய் என கேட்டு கண்டித்ததாக கூறப்படுகிறது, இதில் மனமுடைந்த வைஷ்ணவி வீட்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

போலீசார் விசாரணை

இது குறித்த தகவலின் பேரில் பெரியதச்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைஷ்ணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மருது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்