தூக்குப்போட்டு கல்லூரி மாணவன் தற்கொலை
தூக்குப்போட்டு கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கள்ளப்பட்டி நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுடர்மணி மகன் சாரதிதேவன்(வயது 20). இவர் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்துவந்தார். நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது தந்தை சுடர்மணி பூலாம்பாடிக்கு மின்சார கட்டணம் செலுத்துவதற்காக சென்றுவிட்டார். தாய் பழனியம்மாள் கூலி வேலைக்கு சென்றிருந்தார். தங்கை கவுசிகா கல்லூரி 2-ம் ஆண்டு படித்து வருவதால் அவர் கல்லூரிக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது ஓட்டு வீட்டின் மேற்கூரையில் சாரதிதேவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்று இருந்த தந்தை சுடர்மணி வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாரதிதேவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் சாரதிதேவன் எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.