கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-06-18 22:58 GMT

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகள் நிக்சிதா (வயது 19). இவர் சேலத்தில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் நிக்சிதா நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் மாணவியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி நிக்சிதா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்