பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் போக்சோவில் கைது

செய்யாறு அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-26 13:34 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா மதுரா பைரவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 19). இவர், பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் பிரசன்னாவுக்கும், 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாணவிக்கு வயிற்றுவலி அதிகமாகவே பெற்றோர் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரசன்னாவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்