முதியவரை கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் கைது

முதியவரை கத்தியால் குத்திய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-30 18:46 GMT

கர்ப்பிணி

ஆதனக்கோட்டை ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வருபவர் செல்லத்துரை. இவர் திருப்பூரில் தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சசிகலா (வயது 35). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். தற்போது சசிகலா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்தநிலையில் சசிகலாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த முதலாம் ஆண்டு உடற்கல்வி பயின்று வரும் கல்லூரி மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் அவர்கள் 2 பேரும் சசிகலா வீட்டில் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கைது

இந்தநிலையில் சசிகலாவின் தந்தை சண்முகம் (70) தனது மகளை கவனிப்பதற்காக கடந்த ஒரு மாதமாக சசிகலா வீட்டில் தங்கி இருந்தார். இதனால் சசிகலாவிடம் பழக கல்லூரி மாணவருக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் சசிகலாவின் வீட்டிற்கு சென்று அவரது தந்தை சண்முகத்தின் கழுத்து மற்றும் முதுகு பகுதியில் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதில் காயம் அடைந்த சண்முகம் ஆதனக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் குறித்து ஆதனக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கல்லூரி மாணவனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்