கல்லூரி மாணவி டெங்கு காய்ச்சலுக்கு அனுமதி
கல்லூரி மாணவி டெங்கு காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவேரிப்பாக்கம்
கல்லூரி மாணவி டெங்கு காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அடுத்த பொய்கைநல்லூர் கிராமத்தில் 18 வயது இளம்பெண் ஆற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு கடந்த 4 நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அவரை சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்யப்பட்டதில் டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.