கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்
அம்பையில் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
அம்பை:
அம்பை கலைக்கல்லூரியைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர்கள் நேற்று கல்லூரியின் முன்பு வாயிற் முழக்க போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டின் உயர் கல்வியை சீரழிக்கும் விதமாக தமிழ்நாடு உயர் கல்வி மாமன்றம் அறிமுகப்படுத்தியுள்ள பொது பாடத்திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் முழங்கினர். போராட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.