கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

புளியங்குடி அன்னை மீனாட்சி கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.

Update: 2022-05-29 16:36 GMT

புளியங்குடி:

புளியங்குடி அன்னை மீனாட்சி கல்வியியல் கல்லூரியின் 11-வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி கலை அரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் நிறுவனர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். கல்லூரியின் தாளாளர் மா.முருகன், செயலர் ஜெய ஒளிவு, நிர்வாக இயக்குனர் முருகன், அன்னை மீனாட்சி பப்ளிக் பள்ளி முதல்வர் விஜய லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் அந்தோணிராஜ் வரவேற்று பேசினார். விழாவில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரி சங்க பொதுச்செயலாளர் நடராஜன், துணைத்தலைவர் நாராயணன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக ஆய்வுக்குழு உறுப்பினர் மற்றும் கல்வி ஆலோசகர் அன்ன ராஜா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்