"மாணர்வகளின் சான்றிதழ்களை பிடித்து வைக்க கல்லூரி நிர்வாகத்திற்கு எந்த உரிமையும் இல்லை" - மதுரை ஐகோர்ட்டு
மாணவியின் சான்றிதழ்களை 10 நாட்களில் வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மாணர்வகளின் சான்றிதழ்களை பிடித்து வைக்க கல்லூரி நிர்வாகத்திற்கு எந்த உரிமையும் இல்லை என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கட்டணம் செலுத்தாததால் எஸ்.தங்கப்பழம் வேளாண் கல்லூரி நிர்வாகம் சான்றிதழ் வழங்கவில்லை எனக்கூறி மாணவி தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக ,
கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக சான்றிதழ்களை நிறுத்தி வைக்க கல்லூரி நிர்வாகங்கள், கடன் வழங்குவோர் அல்ல. கல்வி சான்றிதழ்களை யாராலும் அபகரிக்க முடியாது; படிப்பை இடைநிறுத்தம் செய்த மாணவியின் சான்றிதழ்களை 10 நாட்களில் வழங்க வேண்டும் என வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.