கல்லூரி கனவு வழிகாட்டும் நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சியில் கல்லூரி கனவு வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-07-02 15:48 GMT

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான கல்லூரி கனவு வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு தலைமை தாங்கினார். உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், கோட்டாட்சியர் பவித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மேற்படிப்புகள் குறித்தும், எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்தும், உயர்நிலை கல்வியை தேர்ந்தெடுப்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு கல்லூரி கனவு என்னும் வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது. முன்னதாக தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு உறுதிமொழியை மாணவ-மாணவிகள், அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து என் குப்பை, என் பொறுப்பு என்ற தூய்மை விழிப்புணர்வு கானா பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, நகர மன்ற தலைவர் சுப்புராயலு, நகராட்சி ஆணையாளர் குமரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் மடம் பெருமாள், சண்முகம், மாவட்ட கவுன்சிலர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்