குமாரபாளையம்:
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரேணுகா விழாவை தொடங்கி வைத்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் கலந்து கொண்டு, இளநிலை மற்றும் முதுநிலை மாணவ-மாணவிகள் 400 பேருக்கு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பேரவை பொறுப்பாளர் ரமேஷ் குமார் மற்றும் கணிதவியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.