நாமக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 3-ம் கட்ட கலந்தாய்வில் 50 இடங்கள் நிரம்பின
நாமக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 3-ம் கட்ட கலந்தாய்வில் 50 இடங்கள் நிரம்பின
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகள் சேர்க்கைக்கு 970 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதற்காக ஏற்கனவே 2 கட்டமாக மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது. அதில் 720 இடங்கள் நிரப்பப்பட்டன. இந்த நிலையில் மீதமுள்ள 250 இடங்களுக்கு நேற்று 3-ம் கட்ட கலந்தாய்வு நடந்தது. கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் தலைமை தாங்கினார். பேராசிரியைகள் பாரதி, சுபா புவனேஸ்வரி உள்பட பல்வேறு துறைத்தலைவர்கள் பங்கேற்று மாணவிகளின் ஆவணங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்களை சரி பார்த்தனர். இதில் 50 இடங்கள் நிரப்பப்பட்டது. மீதம் காலியாக உள்ள 200 இடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிரியைகள் தெரிவித்தனர்.