மூவர்ண கொடி போல் ஜொலித்த கலெக்டர் அலுவலகம்
ராணிப்பேட்டையில்மூவர்ண கொடி போல் கலெக்டர் அலுவலகம் ஜொலித்தது.
சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது. இந்த நிலையில் கலெக்டர் அலுவலகம் முழுவதும் தேசிய கொடியின் மூவர்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக ஒளிரும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மூவர்ணத்தில் ஜொலிக்கும் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
அதேபோன்று ராணிப்பேட்டை தலமை தபால்நிலையமும் தேசிய கொடிபோன்று மூவர்ணத்தில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.