நடைபாதை ஆக்கிரமிப்பு

Update: 2023-10-09 15:57 GMT


திருப்பூர் கலெக்டா் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருப்பூர் டாக்டர் அம்பேத்கர் நகர் குடியிருப்போா் நலச்சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறியுள்ளதாவது:-

திருப்பூர் பல்லடம் ரோடு உழவர் சந்தை பின்புறம் உள்ள குடியிருப்பில் நாங்கள் 200 மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். நாங்கள் தூய்மை பணி செய்து வருகிறோம். குடியிருப்பின் அருகேயுள்ள சந்தைப்பேட்டையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் கடைகள் கட்டப்பட்டுள்ளது. சந்தைப்பேட்டையின் பின்புறம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சியில் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே நடைபாதையை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்