பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர்

பொய்கை அரசு பள்ளியில் ஆய்வுக்கு சென்ற கலெக்டர், அங்கு ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். படிப்பில் முழுகவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

Update: 2022-07-06 11:59 GMT

பொய்கை அரசு பள்ளியில் ஆய்வுக்கு சென்ற கலெக்டர், அங்கு ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். படிப்பில் முழுகவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

பாடம் நடத்திய கலெக்டர்

வேலூரை அடுத்த ஊசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் மாணவர்களுடன் அவர் அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனித்தார். மேலும் மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி உயர்ந்த பதவிகளை பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். சுத்தமான சீருடையில் நல்ல முறையில் முடி திருத்தம் செய்து வர வேண்டும்.

ஆசிரியர், பெற்றோர் சொல்படி மாணவர்கள் கேட்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். பின்னர் பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார். அங்கு மாணவர்களுக்கு பொருளாதாரம் பாடத்தை நடத்தினார். மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார். பொருளாதாரம் சம்பந்தமாக மாணவர்களுக்கு கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.

இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம்

பின்னர் மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பு புதிதாக கட்டப்பட உள்ளதால் அங்கு வசிப்பவர்கள் அருகில் தற்காலிகமாக தங்குவதற்கான குடியிருப்பு கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து பொய்கை தொடக்க வேளாண்மை கூட்டுறவு நியாய விலை கடையிலும் அவர் ஆய்வு செய்தார். அங்கு பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் வினியோகிக்கப்படுகிறதா? என்றும் பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்