திருக்கோகர்ணம் நகராட்சி பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு

திருக்கோகர்ணம் நகராட்சி பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-09-09 18:28 GMT

அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி உணவு திட்டத்தினை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 15-ந் தேதி தொடங்கி வைக்கிறார். அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக நகராட்சிக்குட்பட்ட 8 தொடக்கப்பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்காக திருக்கோகர்ணம் நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் மைய சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சமைக்கப்படும் உணவுகள் அனைத்தும் வாகனங்கள் மூலமாக உரிய வெப்ப பெட்டகத்தில் எடுத்து செல்லப்பட்டு மற்ற பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கு தயாரிக்கப்படும் உணவுகள் குறித்தும், அதன் தரம் குறித்தும் மற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கு உணவு வினியோகம் செய்யப்படும் கால அட்டவணை குறித்தும் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் அனைத்தும் உயர்ந்த தரத்துடனும், அரசு தெரிவித்துள்ள உணவு அட்டவணையின்படியும் வழங்கவும், மாணவ- மாணவர்கள் உணவு உண்ணும் கூடங்கள் மற்றும் பாத்திரங்கள் அனைத்தும் தூய்மையான முறையில் பராமரிக்கவும், அறிவுறுத்தினார். முன்னதாக அவர் உணவை சாப்பிட்டு பார்த்தார்.

Tags:    

மேலும் செய்திகள்