மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு

ஜோலார்பேட்டையில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-09-03 18:12 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கூடுதல் தகவல்கள் தேவைப்படும் விண்ணப்பங்களுக்கு தகவல்களை சேகரிக்க அந்தந்த கிராம ஊராட்சிகள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வருவாய்த் துறையினர் நேரடியாக வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஜோலார்பேட்டை நகராட்சி சந்தைக்கோடியூர், வக்கணம்பட்டி பகுதியில் வீடு வீடாகச் சென்று கள ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பயனாளிகளின் தொழில், மாத வருமானம், மின் கட்டணம் செலுத்தும் தொகை போன்ற விவரங்களை பயனாளிகளிடம் கேட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் ஜி.பழனி உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

அதேபோன்று நாட்டறம்பள்ளி மற்றும் பச்சூர் பகுதிகளில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து வருவாய் கோட்ட அலுவலர் பானுமதி ஆய்வு மேற்கொண்டார். தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் மற்றும் கிராம உதவியாளர்கள் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்