குப்பை கிடங்கு அமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு

லத்தேரி பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பது குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

Update: 2023-03-15 17:54 GMT

கே.வி.குப்பம் தாலுக்கா லத்தேரி ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். பஸ் நிலையத்தில் உள்ள கடைகளின் வெளிப்பகுதியை நடந்து சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்து வெளியே வீசப்பட்டு இருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுமாறு கடைக்காரரிடம் கூறினார்.

பின்னர் லத்தேரியை அடுத்த கோரப்பட்டறை கிராமத்தில் குப்பைக் கிடங்கு அமைக்க வேண்டிய பகுதியை ஆய்வு செய்தார். செஞ்சி கிராமத்திற்கு செல்லும் வழியில் அரசு இடம் என்று அதிகாரிகளால் சுட்டிக் காட்டப்பட்ட இடத்தில் மாந்தோப்பு இருந்தது. உடனடியாக அந்த மாந்தோப்பு உள்ள இடத்தில் அது அரசாங்கத்திற்கு சொந்தமானது என்று அறிவிப்புப் பலகை வைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

திட்ட இயக்குனர் ஆர்த்தி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், தாசில்தார் அ.கீதா, மண்டல துணை தாசில்தார் ப.சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் த.கல்பனா, வட்டார வளர்ச்சி அலுவலர் பா.வேலு, ஒன்றியக் குழு தலைவர் லோ.ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயாமுருகேசன், ஊராட்சி மன்றத் தலைவர் டி.மோகன், ஊராட்சி செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்