அரசு தொடக்க பள்ளியில் கலெக்டர் ஆய்வு

ஆற்காட்டான்குடிசை அரசு தொடக்க பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-10-07 19:41 GMT

அடுக்கம்பாறை 

ஆற்காட்டான்குடிசை அரசு தொடக்க பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

அடுக்கம்பாறை அருகே ஆற்காட்டான்குடிசை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 85-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அரசு பள்ளிக்கு சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பள்ளி நிர்வாகம் சார்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம், கழிவறை வசதி மற்றும் சத்துணவு கூடம் உள்ளிட்டவை தேவை என்று கோரிக்கை வைத்தனர். கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதேபோல் அந்த கிராமத்தில் 15-வது நிதி குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த தனி நபர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக புகார் அளித்தனர். அந்த இடத்தை ஆய்வு செய்த கலெக்டர், அந்த இடத்திலேயே குடிநீர் தொட்டி அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து அந்த கிராமத்தில் இருந்து வரும் கழிவுநீர் குளத்தில் தேங்குவதை பார்வையிட்டதுடன், கழிவுநீர் குளத்தில் கலக்காமல் அப்புறப்படுத்த வேண்டும் என கூறினார்.

ஆய்வின்போது உதவி கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் செந்தில், ஒன்றியக்குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி, ஊராட்சி மன்ற தலைவர் குமார், கவுன்சிலர் சகாதேவன், வருவாய் ஆய்வாளர் உலகநாதன், கிராம நிர்வாக அலுவலர் ரீனா உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்