தக்கோலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

தக்கோலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-06-10 13:54 GMT

அரக்கோணம்

தக்கோலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

தக்கோலம் பேரூராட்சியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சங்கீதா நகர் பகுதியில் ரூ.26 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதனை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவுப்படுத்தவும் இயற்கை புல்வெளி மற்றும் மரக்கன்றுகள் நடவும் ஆலோசனை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து தக்கோலம் பேரூராட்சியின் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் குப்பைகள் தரம் பிரிக்கும் பணியினை பார்வையிட்டு தூய்மை பணியாளர்களிடம் அவர்களுடைய உடல் நலம், ஊதியம், மருத்துவ சிகிச்சைகள், வேலையின் தன்மைகள் ஆகியவற்றை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து தக்கோலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த நர்ஸ்களிடம் மருத்துவமனையில் பிரசவங்கள் எவ்வளவு நடைபெறுகிறது. நாள்தோறும் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது மருத்துவ அலுவலர் பணி முடித்து வீட்டுக்கு சென்றுள்ளதை கலெக்டரிடம் தெரிவித்தனர். நிரந்தர மருத்துவ அலுவலர் இல்லாததால் தற்பொழுது மருத்துவமனையின் தரம் குறைந்து உள்ளது. முன்பு 20 அல்லது 30 பிரசவங்கள் இந்த மருத்துவமனையில் பார்க்கப்பட்டு வந்த நிலையில் டாக்டர்கள் இல்லாத காரணத்தினால் தற்பொழுது ஒரு பிரசவம் கூட பார்க்க முடியாத நிலைமை உள்ளது. அதனை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் பேரூராட்சி தலைவர் நாகராஜன் தெரிவித்தார். ஆய்வின் போது உதவி இயக்குனர் பேரூராட்சிகள் (பொறுப்பு) அம்சா, பேரூராட்சி மன்ற தலைவர் நாகராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் மாதேஸ்வரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்