இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு

இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.;

Update: 2023-03-31 12:33 GMT

வேலூரை அடுத்த மேல்மொணவூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் 220 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கட்டிட பணிகளுடன், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, தெருவிளக்குகள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்க அவர் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் கவிதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்