செட்டியக்காபாளையத்தில் கலெக்டர் ஆய்வு

செட்டியக்காபாளையத்தில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-07-25 21:45 GMT

நெகமம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 பெற பெண்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்யும் சிறப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டியக்காபாளையம், எம்மேகவுண்டன்பாளையம் பகுதிகளில் நடந்த முகாமை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா, கிணத்துக்கடவு தாசில்தார் சிவக்குமார், கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சிக்கந்தர் பாட்சா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஆவணங்களை பயனாளியிடம் இருந்து தன்னார்வலர்கள் பெற்று செயலியில் பதிவேற்றம் செய்தனர். விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்கு உதவுவதற்கு, உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்