அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் ஆய்வு

நாட்டறம்பள்ளி பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.

Update: 2023-07-20 17:49 GMT

கலெக்டர் ஆய்வு

நாட்டறம்பள்ளியை அடுத்த வேட்டப்பட்டு பகுதியில் செயல் பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். மேலும் ரூ.8½ லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள கதிர் அடிக்கும் களம், கோனேரிகுப்பம் வட்டத்தில் ரூ.1.42 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மைய கட்டிடம் பழுது பார்த்தல், வேட்டப்பட்டு ஊராட்சியில் ரூ.1.37 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் பழுது பார்த்தல் ஆகிய பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் குடிநீர் வசதி, மின் இணைப்பு, கழிப்பிட வசதி குறித்து ஆய்வு செய்து தற்போது ஊரக வளர்ச்சி முகமையின் மூலமாக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து மையங்களிலும் வர்ணம்பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மழைநீர் சேகரிப்பு

ஒவ்வொரு மையத்திலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு செய்யப்பட்டு, வெளியேறுகின்ற நீரானது கசிந்து வெளியே செல்லாத வண்ணம் அனைத்து மையங்களுக்கும் நீர்உறுஞ்சிக்குழிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் அனைத்து மையங்களை சுற்றிலும் மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெற்று வருகிறது.

உணவுப் பொருட்கள் வைக்கப்படும் இடம் சரி செய்யப்பட்டு மழையால் பாதிக்கப்படாத வகையிலும், சமையலறைகள் மேடைகள் அமைக்கப்பட்டு, எளிதில் சமைக்கின்ற வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஜோலார்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் எஸ்.சத்தியா சதிஷ்குமார், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

பண்ணைகுட்டைகள்

ஜோலார்பேட்டை ஒன்றியம் தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் 2 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது தாமலேரிமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் இ.சுதா இளங்கோவிடம் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பண்ணைகுட்டையின் நீளம், அகலம், ஆழம் போன்றவற்றை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் துரை உள்ளிட்ட அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்