சொட்டுநீர் பாசனம் குறித்து கலெக்டர் ஆய்வு
வெங்கடாபுரம் ஊராட்சியில் சொட்டுநீர் பாசனம் குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
வெங்கடாபுரம் ஊராட்சியில் சொட்டுநீர் பாசனம் குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
சோளிங்கர் அடுத்த வெங்கடாபுரம் ஊராட்சியில் பிரதம நுண்ணீர் பாசன திட்டத்தில் நரசிம்மன் என்பவர் 4.5 ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு கேட்டறிந்தார்.
அப்போது ரூ.2.35 இலட்சம் அரசு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் திட்டம் மூலும் பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு நேரடியாக கரும்பின் வேருக்கு சொட்டு நீர் செல்வதால் கரும்பு நல்ல முறையில் வளர்ந்து வந்துள்ளதாகவும், 30 முதல் 40 டன் வரை ஏக்கருக்கு அறுவடை செய்ய முடியும். ஆனால் இத்திட்டத்தில் 60 முதல் 70 டன் வரை மகசூல் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அதே பகுதியில் விவசாயி ஒருவருக்கு நெல் விதைப்பு இயந்திரத்தை கலெக்டர் வழங்கினார். மேலும் நேரடி நெல் விதைப்பு மூலம் நெல் விதைப்பு செய்துள்ளதையும் ஆய்வு செய்தார்.
சிறப்பாக...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் நடவு முறை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 2,000 ஹெக்டேர் பரப்பளவிர்க்கு மேல் விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் நெல் நடவு செய்து உள்ளதாக, கலெக்டரிடம், இணை இயக்குனர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சோளிங்கர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு விதைகள், உயிர் உரம், ஊட்டச்சத்து உரம், நுண்ணுயிர் உரம் போன்றவை விவசாயிகளுக்கு எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தார்.
வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு, வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, துணைஇயக்குனர்கள் விஸ்வநாதன், சீனிராஜ், லதா மகேஷ், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் கார்த்திக், பெருமாள், வேளாண் பொறியியல் துறை உதவிப் பொறியாளர்கள் ரூபன் குமார், ரவிகுமார், வேலூர் விற்பனைக்குழு செயலாளர் கண்ணன், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, சோளிங்கர் வேளாண்மை உதவி இயக்குனர் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.