நாமக்கல் மாவட்டத்தில் நவீன கருவி உதவியுடன் நீர்நிலைகள் அளவீடு செய்யும் பணி கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டார்

நாமக்கல் அருகே நீர்நிலைகளை நவீன கருவி கொண்டு அளவீடு செய்யும் பணியை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-06-04 15:32 GMT

நாமக்கல்:

நாமக்கல் அருகே நீர்நிலைகளை நவீன கருவி கொண்டு அளவீடு செய்யும் பணியை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நீர்நிலைகள் அளவீடு

நாமக்கல் மாவட்டத்தில் டி.ஜி.பி.எஸ். என்னும் நவீன கருவியினை கொண்டு நீர்நிலைகளை அளந்து வரைப்படம் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கருவியை கொண்டு அளவுப்பணி செய்வதால் பூமியில் உள்ள அச்சரேகை மற்றும் தீர்க்கரேகையை கணக்கிட்டு செயற்கைகோள் மூலம் எல்லை துல்லியமாக நிர்ணயம் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

நீர்நிலைகளின் எல்லைகள் இந்த நவீன கருவி கொண்டு அளவு செய்யும் பணி தமிழக அரசு மற்றும் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இப்பணியினால் வருங்காலங்களில் நீர்நிலைகளில் ஏற்படும் ஆக்கிரமிப்புகளை செயற்கைகோள் மூலம் எளிதில் கண்காணிக்கலாம். இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் 80 நீர்நிலைகள் இக்கருவியின் மூலம் தரவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆய்வு

நாமக்கல் அருகே உள்ள சிலுவம்பட்டி கிராமத்தில் அரசு புறம்போக்கு ஏரி நில அளவை துறையினரால் நவீன நில அளவை கருவி மூலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து நவீன முறையில் நில அளவீடு செய்யும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, நாமக்கல் மாவட்ட நில அளவை உதவி இயக்குனர் சிவகுமார், நில அளவை பணியாளர்கள் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்