கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் தமிழ் கனவு திட்டம் நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் தமிழ் கனவு திட்டம் நிகழ்ச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது;
தியாகதுருகம்,
கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழ் இணைய கல்வி கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ் கனவு திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா, மாவட்ட வருவாய் அலுவலர் பவித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக எழுத்தாளர் பாவா செல்லதுரை கலந்து கொண்டு கவிதைகளின் வழியே தமிழ் மனம் என்ற தலைப்பிலும், எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி ஒரு நூற்றாண்டு வேர்களைத் தேடி என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர். தொடர்ந்து தமிழ் பெருமிதம் எனும் நூலை வாசித்து சிறந்த கருத்துக்களை வழங்கிய மாணவ, மாணவிகளுக்கு பெருமித செல்வன், பெருமித செல்வி, எனவும், எழுத்தாளர்கள் பேசிய பேச்சுக்கள் குறித்து சிறந்த கேள்விகளை எழுப்பிய மாணவ, மாணவிகளுக்கு கேள்வி நாயகன், கேள்வி நாயகி எனவும் கவுரவப்படுத்தி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ் கனவு திட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர் சித்தானை, மருத்துவ கல்லூரி மருத்துவ கண்காணிப்பாளர் நேரு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் செல்வி, மாவட்டத் தாட்கோ மேலாளர் ஆனந்த மோகன், தாசில்தார் சத்தியநாராயணன், மருத்துவர் பழமலை, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.