ஓட்டப்பிடாரம் அருகே வேடநத்தம் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 256 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

ஓட்டப்பிடாரம் அருகே வேடநத்தம் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 256 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

Update: 2023-10-11 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே வேடநத்தம் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 256 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இம்முகாமிற்க்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். முகாமில் வருவாய்த்துறை, மகளிர் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகள் சார்பில் 256 பயனாளிகளுக்கு ரூ.79 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து கலெக்டர் பேசுகையில், கிராம மக்கள் கோரிக்கைகளை எளிதில் தெரிவிக்கும் வகையில் தான் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாதந்தோறும், இது போன்று சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் அனைத்து அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டு மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று 14 நாட்களில் தீர்வு காணப்படும். இந்த கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பு முகாம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசு துறை சார்பில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தனித்து ெசயல்படுவதை தவிர்த்து விட்டு, கூட்டாக சேர்ந்து இயங்க வேண்டும், என்றார்.

பின்னர், பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த திட்டவிளக்கக் கண்காட்சி அரங்குகளை கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், கோவில்பட்டி உதவி கலெக்டர் ஜேன் கிறிஸ்டி பாய், யூனியன் துணைத் தலைவர் காசிவிஸ்வநாதன், வேடநத்தம் பஞ்சாயத்து தலைவர் கற்பகவள்ளி, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு)பாலசுப்பிரமணியன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் சஞ்சீவிராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஸ்வர்ணலதா, ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், யூனியன் ஆணையாளர் சிவபாலன், கூடுதல் ஆணையாளர் கிரி உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்