கயத்தாறில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் இடத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு
கயத்தாறில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் இடத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
கயத்தாறு:
கடம்பூரில் பேரூராட்சியில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வருகின்ற 29-ந்தேதி நடைபெறுகிறது. அங்கு பதிவாகும் வாக்குகள் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்பட உள்ளது. இந்த வாக்கும் எண்ணும் மையத்தை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல் காசிம், தேர்தல் உதவிஅலுவலர் ஜஸ்டின் செல்லத்துரை மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.