துபாய் தீவிபத்தில் இறந்த 2 பேரின் உடல்களுக்கு கலெக்டர் அஞ்சலி

துபாய் தீவிபத்தில் இறந்த 2 பேரின் உடல்களுக்கு கலெக்டர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2023-04-18 19:25 GMT

துபாயில் 5 அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம், ராமராஜபுரம் பகுதியில் உள்ள பள்ளிவாசல் தெருவை சேர்ந்த இமாம் காசிம்(வயது 43), முகமது ரபிக்(49) என்பவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களது உடல்களை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு இருவரின் உடல்களும் கொண்டுவரப்பட்டன. காலை 6.30 மணிக்கு வந்த அவர்களது உடல்களுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், கோட்டாட்சியர் தவசெல்வம், திருச்சி கிழக்கு தாசில்தார் கனகரத்தினம், போலீஸ் துணை கமிஷனர் தேவி, உதவி கமிஷனர் சுரேஷ்குமார், கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இருவரது உடல்களும் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்