கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

மக்கான் பகுதி சாலையில் கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

Update: 2023-06-07 17:10 GMT

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வேலூர் மக்கான் அம்பேத்கர்நகர் பகுதியில் சாலை வசதி மற்றும் கழிவுநீர் கால்வாய் குறித்து ஆய்வு செய்தார். அப்போது பொது கழிப்பிடத்தை சுத்தமாக வைத்திருக்க அறிவுரை வழங்கினார். இதையடுத்து மக்கான் பகுதியில் கழிவுநீர் சாலையில் செல்வதை பார்வையிட்டார். அங்கு கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் சாலையை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க கூறினார். அதைத்தொடர்ந்து அங்குள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு புறநோயாளிகள், உள்நோயாளிகளுக்கு சரியாக சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி, தாசில்தார் செந்தில், மாநகராட்சி இளநிலை பொறிளாளர் சீனிவாசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்