பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை நிலுவையில் வைக்க கூடாதுஅதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை நிலுவையில் வைக்க கூடாது என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.;
திருப்பத்தூர்
பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை நிலுவையில் வைக்க கூடாது என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்பட மொத்தம் பெறப்பட்ட 255 கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
அப்போது அவர் பேசுகையில் 'உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் கீழ் வரபெற்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை நிலுவையில் வைத்து இருக்கக் கூடாது. மனுக்கள் சரியானதாக இருந்தால் தீர்வு காண வேண்டும். நிறைவேற்ற முடியாத கோரிக்கை என்றால் அதற்கான அதற்கான காரணத்தை மனுதார்களுக்கு தெரிவித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனால் மாவட்டத்தில் 4 நகராட்சி நிர்வாகமும், கால்வாய்தூர்வாருதல் போன்வற்றை உடனடியாக செய்து தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, தனித்துனை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆணையர் (கலால்) பானு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.