டாஸ்மாக் கடையை மூட கலெக்டர் உத்தரவு

மகாவீர் ஜெயந்தியையொட்டி, வருகிற 4-ந்தேதி டாஸ்மாக் கடையை மூட கலெக்டர் உத்தரவிட்டாா்.

Update: 2023-03-30 20:15 GMT

கடலூர்:

மகாவீர் ஜெயந்தி தினத்தையொட்டி வருகிற 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் மட்டும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள் (டாஸ்மாக்), அரசு மதுபானக்கூடங்கள், எப்.எல்-2 மற்றும் எப்.எல்.3 பார்களை மூட வேண்டும். அன்றைய தினம் மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றாலோ, அரசு மதுபானக் கூடங்கள் மற்றும் எப்.எல்-2, எப்.எல்.3 மதுபானக்கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், எப்.எல்-2 மற்றும் எப்.எல்.3 உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்