மிலாது நபியை முன்னிட்டு மதுக்கடைகளை நாளை மறுநாள் மூட கலெக்டர் உத்தரவு

மிலாது நபியை முன்னிட்டு நாளை மறுநாள் சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2022-10-06 23:32 GMT

மிலாது நபியை முன்னிட்டு நாளை மறுநாள் சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மிலாது நபியை முன்னிட்டு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள பார்கள் மூடப்பட வேண்டும். மேலும், அரசு உரிமம் பெற்ற ஓட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, நாளை மறுநாள் அரசு உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்