18 அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பணி உயர்வு ஆணை கலெக்டர் வழங்கினார்

Update: 2023-08-01 08:20 GMT

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 287 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து சமூக நலன் மற்றும் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், அங்கன்வாடி மையங்களில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த 18 அங்கன்வாடி உதவியாளர்களுக்கு அங்கன்வாடி பணியாளராக பணி உயர்வு ஆணையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சா.செல்வகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் பா.கல்யாணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்