வாரச்சந்தை கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு

கம்பம் நகராட்சியில் வாரச்சந்தை கட்டுமான பணிகளை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.

Update: 2023-01-04 18:45 GMT

கம்பம் நகராட்சி பகுதியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.7 கோடியே 75 லட்சம் செலவில் கடைகள், உணவக கட்டிடம் ஆகிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆலமரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.76 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைகளை பார்வையிட்டார். தொடர்ந்து நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில் கம்பம் நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், பொறியாளர் பன்னீர், உதவி பொறியாளர் சந்தோஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்