ஆடித் திருவாதிரை விழா முன்னேற்பாடுகளை கலெக்டர் ஆய்வு
ஆடித் திருவாதிரை விழா முன்னேற்பாடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சிபுரிந்த மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ஆடித் திருவாதிரை விழா இன்று(சனிக்கிழமை) கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நடைபெற உள்ளது. இதையொட்டி இந்த விழாவிற்கான முன்னேற்பாடுகளை நேற்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு செய்தார்.