பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கலெக்டர் ஆய்வு

காணை ஒன்றியத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-10-28 18:45 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காணை ஒன்றியம் மாம்பழப்பட்டு பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.2 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால், சாலை வசதி, தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் மோகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் அதிக நீரால் சூழக்கூடிய பகுதிகளாக 8 இடங்களும், நடுத்தரமான அதிக நீரால் சூழக்கூடிய பகுதிகளாக 35 இடங்களும், பகுதியளவு நீரால் சூழக்கூடிய பகுதிகளாக 79 இடங்களும் ஆக மொத்தம் 122 இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் தகுந்த முன்னெச்சரிகை நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏதுவாக அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இடர்பாடு

அதனடிப்படையில் மாம்பழப்பட்டு பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காதவாறும், மழைநீர் வடிகால் சீர்செய்யும் பணியை விரைந்து முடித்திடவும், சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு எந்தவொரு இடர்பாடும் ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவசேனா, உதவிப்பொறியாளர் வசந்தப்பிரியா, காணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன், எழிலரசு உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்