வளர்ச்சி பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

சீர்காழி பகுதியில் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-09-07 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி பகுதியில் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

சீர்காழி அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சிகிச்சை பெற வந்த நோயாளிகளிடம் அடிப்படை வசதி குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து நோயாளிகளின் வருகை பதிவேடு மற்றும் மருந்து இருப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் வைத்தீஸ்வரன் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று மாணவர்களுக்கு வழங்க இருந்த உணவினை பரிசோதனை செய்ததோடு, குழந்தைகளிடம் கல்வி திறன் குறித்தும் கேட்டறிந்தார்.

குளம் சீரமைக்கும் பணி

மேலும் அங்கன்வாடி அமைப்பாளரிடம் குழந்தைகளுக்கு தினமும் கொழுக்கட்டை, சாதம், இணை உணவு மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சத்து மாவு வழங்கும் விதம் குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நுகர்பொருள் மொத்த விற்பனை பண்டக சாலை நியாய விலை கடைக்கு சென்று கலைஞரின் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் விவரங்களை கேட்டறிந்தார்.

அப்போது பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் உணவு பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருதங்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குளம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விரைந்து முடிக்க...

இந்த பணியினை பார்வையிட்டு விரைந்து முடிக்க ஒன்றிய பொறியாளரை கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செந்தில்குமார், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய ஆணையர்கள் சரவணன், இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர் அலெக்ஸ், ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்