செஞ்சேரியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

செஞ்சேரியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-10-14 19:05 GMT

பெரம்பலூர் ஒன்றியம், ஆலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட செஞ்சேரி இந்திரா காலனியில் நடைபெற்று வரும் 15-வது நிதிக்குழு மானிய நிதியின் மூலம் ரூ.2 லட்சம் செலவில் 90 மீட்டர் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் செஞ்சேரி கிராமம் முழுவதும் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் பொது மக்களின் அன்றாட குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திடும் வகையில் வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் அமைக்கும் பணியினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன், ஆலம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக உலக சுற்றுலா தினத்தையொட்டி செஞ்சேரியில் தன்னார்வ அமைப்பில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மாவட்ட சுற்றுலா துறையின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சை அரண்மனை, பெருவுடையார் கோவில், சரஸ்வதி மஹால், சரபோஜி மன்னர் அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு வந்தனர். சுற்றுலா சென்று வந்த குழந்தைகளை கலெக்டர் கற்பகம் நேரில் சந்தித்து அவர்களின் சுற்றுலா அனுபவங்களை கேட்டறிந்தாா்.

Tags:    

மேலும் செய்திகள்