ரூ.3½ கோடியில் வாரச்சந்தை கட்டும்பணியை கலெக்டர் ஆய்வு

ரூ.3½ கோடியில் வாரச்சந்தை கட்டும்பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-11-02 18:18 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.3½ கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோன்று பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறையும்கட்டப்படுகிறது.

இந்த பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன், ஒன்றியக் குழு தலைவர் வடிவேலு, பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்