வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் ஆய்வு
ஆற்காட்டில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பழுதான வாக்குப்பதிவு எந்திரங்களை பழுது நீக்கம் செய்வதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டார். ஆற்காடு தாசில்தார் சுரேஷ், தேர்தல் தனி தாசில்தார் ஜெயக்குமார், தேர்தல் துணை தாசில்தார் சோனியா மற்றும் அரசியல் கட்சி பிரமுகர் உடன் இருந்தனர்.