பள்ளி கட்டிட பணிகளை கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் பள்ளி கட்டிட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தாா்.

Update: 2023-05-12 18:45 GMT

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி ஒன்றியம் நிறைமதி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் பள்ளி சுற்றுச்சுவர் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி

திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் ஆசாரி குளம் புனரமைப்பு பணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து நீலமங்கலம் கிராமத்தில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.25 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 2 வகுப்பறை கூடுதல் கட்டிட பணியை கலெக்டர் ஆய்வு செய்து விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அப்போது அவர், குறிப்பிட்ட நாட்களுக்குள் பணியை விரைந்தும், தரமாகவும் கட்ட வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கும், அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார். ஆய்வின்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குமார், ஊரக வளர்ச்சி முகமை உதவி கோட்ட பொறியாளர் பரமானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், ரவிச்சந்திரன், நிறைமதி ஊராட்சி மன்றதலைவர் பச்சமுத்து, நீலமங்கலம்

ஊராட்சிமன்ற தலைவர் ஜெயசங்கர் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள், பணி

மேற்பார்வையாளர்கள் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்