இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்பு கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு
இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்பு கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூரை அடுத்த மேல்மொணவூரில் இலங்கை தமிழர்கலுக்காக ரூ.11 கோடி மதிப்பில் 55 தொகுப்புகள் கொண்ட 220 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த வீடுகள் தரமானதாக கட்டப்படுகிறதா? என்று மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கட்டிடப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் சிமெண்டின் அளவு மற்றும் அதன் தரம் குறித்தும், மணலின் அளவு மற்றும் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
மேலும் வீட்டின் மேல்ஏறி மேல்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கான்கிரீட் அமைக்கும் பணியையும் அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, வேலூர் தாசில்தார் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வின்சென்ட்ரமேஷ்பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.