வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை கலெக்டர் ஆய்வு
வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை கலெக்டர் ஆய்வு
ஊட்டி
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.ஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்றது. இங்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதில் வாக்காளர்கள் உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர்.
இந்த நிலையில் அந்த முகாம்களை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், முகாம்களை தவிர ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய விண்ணப்பத்தை அளித்து வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்றார். ஆய்வின்போது ஊட்டி தாசில்தார் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.